டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய ஆடவர் அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா பின்னுக்குத் தள்ளப்பட்டு முதல் இடத்தைப் பிடித்தது. தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 115 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்கிறது. ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 106 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து (100), தென்னாப்பிரிக்கா (85) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
Tags :