திருடிவிட்டு விமானத்திலேயே பறக்கும் ஹைடெக் திருடன்

by Staff / 05-07-2023 02:32:13pm
திருடிவிட்டு விமானத்திலேயே பறக்கும் ஹைடெக் திருடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து திருடிவிட்டு, விமானத்திலேயே சொந்த ஊருக்கு தப்பும் ஹைடெக் திருடனை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருடிவிட்டு சொந்த ஊரான தெலுங்கானாவுக்கு தப்பிச் செல்லும் திருடனை போலீசார் பிடித்தனர். உமா பிரசாத் என்ற நபர் கேரளாவுக்கு விமானத்தில் வந்து திருடி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போதும் திருடிவிட்டு விமான நிலையத்திற்கு வந்த போது கையும் களவுமாக சிக்கினார். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via

More stories

Logo