தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை

by Editor / 01-02-2025 06:05:40pm
தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை

விசிக-வில் இருந்து விலகியிருந்த ஆதவ் அர்ஜுனா நேற்று (ஜன.31) தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு பொறுப்பு வழங்கிய, தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு நன்றி. சமத்துவ, சமூகநீதி கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன் ” என தெரிவித்துள்ளார்.

 

Tags : தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை

Share via