எம்.பி., கணேசமூர்த்தி மறைவு - உடைந்து போன வைகோ

by Staff / 28-03-2024 12:02:37pm
எம்.பி., கணேசமூர்த்தி மறைவு - உடைந்து போன வைகோ

ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு ஆராத் துயரமும், அளவிட முடியாத வேதனையும் அடைந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கொங்கு சீமையில் கொள்கை காவலரை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் தற்கொலை என்ற செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.கடந்த 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்று கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணேசமூர்த்தியின் உயிர் பிரிந்தது.

 

Tags :

Share via

More stories