கஞ்சா வைத்திருந்த நபர் கைது

சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது.விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே மீனம்பட்டி பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாபில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் டேவிட் (42) என்பவரை சோதனை செய்த போது 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் டேவிட்டை கைது செய்தனர்.
Tags :