கேரளாவில் கனமழை, 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கேரளாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா கடற்கரையில் இருந்து கேரளாவின் வடக்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், கேரளாவில் இன்றும் ஆகஸ்ட் 27ஆம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன்படி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















