5 இடங்களில் ரெம்டெசிவிர்  மருந்து விற்பனை மையம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

by Editor / 08-05-2021 04:10:09pm
 5 இடங்களில் ரெம்டெசிவிர்  மருந்து விற்பனை மையம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவை பாதிக்கப்படாது. பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 15-ந்தேதிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12,500 படுக்கைகள் ஏற்படுத்தப்படும்.மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படும். கொரோனாவுக்கு சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை முறையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


 

 

Tags :

Share via