சமூக வலைதளங்கள் மூலம் எதிரிகளை தேடும் தலிபான்கள்

by Admin / 21-08-2021 05:03:40pm
சமூக வலைதளங்கள் மூலம் எதிரிகளை தேடும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் மூலம் பொதுமக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு மற்றும் பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

யாரையும் நாங்கள் பழி வாங்க மாட்டோம் என்று  தலிபான்கள்  கூறி இருந்தாலும், பல இடங்களிலும் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள்.

இதற்காக வீடு வீடாக சென்று சோதனையிட்டு வருகின்றனர். அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக பணிகளை செய்தவர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோரை தேடி பிடித்து வருகிறார்கள்.

தங்கள் எதிரிகளை கண்டு பிடிப்பதற்காக தலிபான்கள் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலை தளங்களை ஆய்வு செய்து தங்களுக்கு எதிரான நபர்களை கண்டுபிடிக்கின்றனர். அவர்களுக்கு யார்- யார் நட்பாக இருந்தார்கள் என்பதையும் ஆய்வு செய்து அதன்மூலமும் அடையாளம் காணுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் மூலம் பொதுமக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு மற்றும் பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

அதன் தகவல்களை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கைரேகை பதிவு மூலம் அடையாளம் காண்கிறார்கள். அதற்கான லேசர் ரெடினா ஸ்கேன் கருவிகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.

Tags :

Share via