டாஸ்மாக்கில் ஊழல், லஞ்சம்.. ஊழியர் தற்கொலை முயற்சி

by Editor / 22-05-2025 01:34:31pm
டாஸ்மாக்கில் ஊழல், லஞ்சம்.. ஊழியர் தற்கொலை முயற்சி

அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருக்கும் டாஸ்மாக் பாரை லீசுக்கு எடுத்து நடத்திய டாஸ்மாக் ஊழியர் உயர் அதிகாரிகள் மீது லஞ்ச குற்றசாட்டை முன்வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. திருச்சி தென்னூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் திருச்சி மண்டல டாஸ்மாக் GM, AM, SRM ஆகியோருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15 லட்சம் அளவில் லஞ்சம் செல்வதாகவும், தனது 6 கடைகளை மூடிவிடுவதாக மிரட்டி பணம் கேட்பதாகவும் கூறி வருத்தத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via