1 லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா? - அன்புமணி கண்டனம்
1 லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா? என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25% இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடவில்லை. கல்வி உரிமைச் சட்டப்படி சுமார் 1 லட்சம் ஏழை மாணவர்களை தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்க வைக்க முடியும். திமுக அரசு அதன் தவறு, அலட்சியம் காரணமாக ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடக்கூடாது என கூறியுள்ளார்.
Tags :



















