புதுச்சேரி - சட்டபேரவை இன்று கூடுகின்றது.

by Editor / 20-09-2023 08:14:43am
புதுச்சேரி - சட்டபேரவை இன்று கூடுகின்றது.

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ரங்கசாமி 2023-2024ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 10-நாட்களுக்கு கூட்டம் நடைபெற்ற நிலையில் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக புதுச்சேரி சட்டபேரவை இன்று காலை 09.30 மணிக்கு கூடுகின்றது.

இதனிடையே ஒவ்வொரு நிதியாண்டும் 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டுமென்ற விதி உள்ளது. அதன்படி இன்று  காலை 9.30க்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.இந்த கூட்டத்தில் இக்கல்வியாண்டில் முதன்முதலாக மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு காரணமான பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, துணைநிலை ஆளுநர் தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

 

Tags : புதுச்சேரி - சட்டபேரவை இன்று கூடுகின்றது.

Share via

More stories

Logo