எரிக்கப்பட்ட உடல்.. 70 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த சிறுவன்

by Editor / 21-04-2025 04:56:34pm
எரிக்கப்பட்ட உடல்.. 70 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த சிறுவன்

உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட 70 நாட்களுக்கு பின் உயிரிழந்த சிறுவன் வீட்டுக்கு வந்ததால் உறவினர்கள் அதிர்ந்துபோயினர். பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த பிப்.8 மாயமானார். பின் பி.26 அன்று ரயிலில் அடிபட்டு சிறுவன் இறந்ததாக ரூ.4 லட்சம் இழப்பீடு அரசு சார்பில் வழங்கப்பட்டு உறவினர்கள் உடலை நல்லடக்கம் செய்தனர். இதனிடையே, 70 நாட்கள் கழித்து சிறுவன் வீட்டுக்கு நலமுடன் வந்தார். தன்னை கடத்திய நபர்கள் நேபாளத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் சிறுவன் கூறியதால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via