ஐ.எஸ். தலைவர் அபு ஹசன் கொல்லப்பட்டார்

by Staff / 01-12-2022 11:11:03am
ஐ.எஸ். தலைவர் அபு ஹசன் கொல்லப்பட்டார்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல் குரேஷி கொல்லப்பட்டார். இந்த செய்தியை ஐ.எஸ். செய்தி தொடர்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடவுளின் எதிரிகளின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்று அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவராக அபு அல் ஹுசைன் அல் ஹுசைனி அல் குரேஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அபு ஹசனுக்கு முன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை வழிநடத்திய அபு இப்ராஹிம் அல் குரேஷி அமெரிக்காவால் கொல்லப்பட்டார். ஈராக் குடியுரிமை பெற்ற அபு ஹசன், கடந்த மார்ச் மாதம் பயங்கரவாத அமைப்பின் தலைவரானார். அவர் ஈராக் நகரமான தால் அஃபாரை தளமாகக் கொண்ட அமைப்பை வழிநடத்தினார். இவரது மரணம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. புதிய தலைவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.க்கு செல்வாக்கு உள்ளது. ஐ.எஸ் அமைப்பில் இன்னும் 10,000 உறுப்பினர்கள் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via