ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

by Staff / 18-01-2023 11:49:13am
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் கேரம் டவுன்ஸில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் சில குண்டர்கள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். கோவிலின் சுவர்களில் இந்திய எதிர்ப்பு எழுத்துக்கள் எழுதப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பதிலளித்த உள்ளூர் எம்பி பிராட் பேட்டின், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இம்மாதம் 12ஆம் தேதி மெல்போர்னில் உள்ள சுவாமி நாராயண் கோயிலிலும் குண்டர்கள் தாக்குதல் நடத்தி சுவர்களில் இந்துஸ்தான் முர்தாபாத் என்று எழுதி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories