சபரிமலைக்கு பக்தர்கள் செல்லத்தடை .

by Admin / 20-11-2021 07:48:42pm
 சபரிமலைக்கு பக்தர்கள் செல்லத்தடை .

 

பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு... சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு...
பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

 பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, கல்கி அணையிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி, சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் குறைந்த பின்,  பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo