“கலைஞரின் இலக்கிய நுட்பத்தை இளம்தலைமுறையினர் அறியட்டும்”முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Editor / 27-06-2025 03:36:54pm
“கலைஞரின் இலக்கிய நுட்பத்தை இளம்தலைமுறையினர் அறியட்டும்”முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதினம், நாடகம், சிறுகதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட இலக்கியத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வெற்றி கண்ட முத்தமிழ் வித்தகர், தலைவர் கலைஞர் தான். கலைஞர் நூற்றாண்டையொட்டி, சாகித்ய அகாடமி, ஜவஹர்லால் பல்கலைக்கழகம் இணைந்து இருநாள் கருத்தரங்கம் நடத்துகிறது. கலைஞரின் இலக்கிய நுட்பத்தையும் அதில் பொதிந்துள்ள அரசியலின் ஆழத்தையும் இளம்தலைமுறையினருக்கு வெளிச்சமிட்டுக் காட்டட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via