விக்னேஷ் சிவன் பட தலைப்பிற்கு பிரச்சனை

by Staff / 15-12-2023 05:02:07pm
விக்னேஷ் சிவன் பட தலைப்பிற்கு பிரச்சனை

இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக லவ் டுடே இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து LIC (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை நேற்று , சென்னையில் நடந்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் வைத்துள்ள LIC என்ற பட தலைப்பை 2015 ஆண்டே நான் என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று இயக்குனர் எஸ்..எஸ்..குமரன் தெரிவித்துள்ளார். எனவே , விக்னேஷ் சிவன் தற்போது,அந்த தலைப்பை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது..

 

Tags :

Share via