தக் லைஃப் விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Editor / 19-06-2025 03:33:38pm
தக் லைஃப் விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் ஜூன் 5ஆம் தேதி வெளியானது. ‘கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது’ என கமல் பேசியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை. இந்நிலையில், "கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்" என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via