சபரிமலை: 13 நாட்களில் 8 லட்சம் பேர் சாமி தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், 13 நாட்களில் 8 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதற்கிடையே, சபரிமலை அரவண பாயசத்தில் இனி ஏலக்காய் பயன்படுத்துவது இல்லை என திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Tags :