உலக சுகாதார நிறுவனம்  அங்கீகரித்த  முதல் மலேரியா தடுப்பூசி

by Editor / 07-10-2021 06:52:57pm
உலக சுகாதார நிறுவனம்  அங்கீகரித்த  முதல் மலேரியா தடுப்பூசி

முதன்முறையாக RTS, S/AS01 என்னும் மலேரியா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


கொசுக்களால் பரவும் காய்ச்சலான மலேரியா நோய்க்கு, சிகிச்சையளிக்க திறன் வாய்ந்த மருந்துகள் உள்ளன. ஆனாலும் மருந்துகள் சரியாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பதில்லை. மலேரியா நோய்க்குத் தடுப்பூசி இல்லாததால் ஆண்டுக்கு 4 லட்சம் உயிர்கள் பலியாகின்றன. இதனால், உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து மலேரியா தடுப்பூசியை உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி வந்தது. இதற்கு பலனாக முதன்முறையாக RTS, S/AS01 என்னும் மலேரியா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via