தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு டிடிவி பாராட்டு

by Staff / 28-10-2023 12:51:03pm
தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு டிடிவி பாராட்டு

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசன், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை குவித்திருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo