புலி அட்டகாசம் தொடர்ந்து மாடுகளை கொல்லும்  பரிதாபம்.விவசாயிகள் அச்சம்.

by Editor / 15-01-2025 11:27:40am
புலி அட்டகாசம் தொடர்ந்து மாடுகளை கொல்லும்  பரிதாபம்.விவசாயிகள் அச்சம்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் யானைகளால் விளைநிலங்கள் சேதமடைந்துவந்த நிலையில் சிறுத்தைகள் தாக்குதல்களில் ஆடுகளும்,மாடுகளும் பலியாகியது.இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்பொழுது புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்குள் மூன்று மாடுகளை புலித் தாக்கி மாடுகள் பரிதாபமாக பலியாகி உள்ளன. இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தெரிவித்தும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 14 ஆம் தேதி மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் பகுதியில் முகமது ஹனிபா என்பவர் தனது தொழுவத்திலிருந்து மாடுகளை பக்கத்தில் உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார் அப்பொழுது சினை பசுமாடு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மாட்டை புலி ஒன்று தாக்கி கொன்றது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து அலறவே புலி தப்பித்து ஓடியது இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவே வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் பார்வையிட்டு புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து சென்றுள்ளனர். நாளுக்கு நாள் மேக்கரை பகுதியில் புலியின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்-

 

Tags : புலி அட்டகாசம் தொடர்ந்து மாடுகளை கொல்லும்  பரிதாபம்.விவசாயிகள் அச்சம்.

Share via