கர்ப்பிணிக்கு மரண தண்டனை
வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வடகொரியாவில் மனித உரிமை மீறல் இருப்பதாக தென்கொரியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அற்க்கையில், சிறுவர்களுக்கு மரண தண்டனை மற்றும் 6 மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை போன்ற கொடூரமான தண்டனை விதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றம் சாட்டுக்களை வைத்துள்ளனர்.
Tags :