போலி டாக்டர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை பாலமேடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் பழனியப்பன் (வயது 36). இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52), என்பவரிடம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார். போலி டாக்டர் அப்போது அவர், பழனியப்பனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றி, மருத்துவம் பார்த்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் பழனியப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போலி டாக்டர் முருகேசனை கைது செய்தனர். 4 ஆண்டு ஜெயில்இந்த வழக்கு விசாரணை, ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் நடுவர் நீதிமன்ற நீதிபதி முருகேசனுக்கு 4 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ. 6 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து முருகேசன் சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சேலம் நீதிமன்றமும் தண்டனையை உறுதிப்படுத்தியது. தலைமறைவு இதனைத் தொடர்ந்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராக கடந்த மார்ச் 13-ம் தேதி உத்தரவு போடப்பட்ட நிலையில், முருகேசன் ஆஜராகாமல் தலை முறைவாக இருந்தார். இதனை யடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பழனிசாமி மற்றும் போலீசார், தலைம றைவாக இருந்த போலி மருத்துவர் முருகேசனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.
Tags :