பிரிந்து வாழ்ந்த பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை கேட்டு போராட்டம்

by Editor / 28-07-2025 01:21:41pm
பிரிந்து வாழ்ந்த பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை கேட்டு போராட்டம்

தெலுங்கானாவின் மஞ்சிரால் மாவட்டத்தில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த லாவண்யா என்ற பெண், தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். திருமணமான 3 ஆண்டுகளிலேயே லாவண்யா உயிரிழந்ததால், வரதட்சணையாக அளித்த ரூ. 50 லட்சம் பணம் மற்றும் 25 சவரன் நகைகளை கணவர் வீட்டார் திருப்பி தர வேண்டும் என கூறி லாவண்யாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via