குற்றால அருவிகளில் குளிக்க 2 தடுப்பு ஊசி செலுத்திய சான்று அவசியம்.

by Editor / 20-12-2021 12:14:11am
குற்றால அருவிகளில் குளிக்க 2 தடுப்பு ஊசி செலுத்திய சான்று அவசியம்.

தென்காசி மாவட்டத்திலுள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல்  தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று  முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஐந்தருவி புலியருவி குண்டாறு அணை பகுதியில் உள்ள அருவிகள் மேக்கரை பகுதிகள்  உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

குற்றால அருவிகளில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் குற்றாலம் மெயின் அருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்கவும், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்கவும், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள்  மட்டுமே சமூக இடைவெளியுடன் உடல் வெப்ப அளவை கண்டறிந்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் குற்றால அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக இரண்டுக்கட்ட தடுப்பு ஊசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதியளிக்கப்படுமென மாவட்ட காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் அறிவித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதற்கான சான்றுகளை கொண்டுவரவேண்டும் என்பது அவசியம்.

குற்றால அருவிகளில் குளிக்க 2 தடுப்பு ஊசி செலுத்திய சான்று அவசியம்.
 

Tags :

Share via