அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது.
இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது:
உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் நமக்குக் கிடைத்த தகவல்கள்படி, புடின் தனது படைகளை அதிகரிக்கும் விதம், அவற்றை (உக்ரைனில்) பயன்படுத்த என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அது விரைவான காலக்கட்டத்தில் நடக்கும்.பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்கு உத்தர விடுவார்.
எப்படியும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.அவர் இராஜ தந்திரத்தில் ஈடுபட விரும்பினால், நாங்கள் ஒரு இராஜதந்திர பாதை நோக்கி செல்ல விரும்புகிறோம்.
அவர் படையெடுப்பை தேர்வு செய்தால், தீர்க்கமாகப் பதிலளிப்பதற்காக எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.
ஜெர்மனி, போலந்து, ஆர்மீனியா நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்படுவது உக்ரைனில் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக அல்ல. உக்ரேனிய எல்லைக்கு வரும் புதிய படைகள் உட்பட ரஷ்ய ராணுவ விரிவாக்கத்தின் அறிகுறிகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Tags :