தேர்தல் தொடர்பாக பாஜக இன்று முக்கிய ஆலோசனை

by Staff / 10-10-2023 12:14:37pm
தேர்தல் தொடர்பாக பாஜக இன்று முக்கிய ஆலோசனை

கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது என்பது குறித்து தமிழக பாஜக இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியில் புதிய தமிழகம், தமாகா, ஏ.சி.சண்முகம், பச்சமுத்து ஆகியோர் கொண்ட கட்சி இருக்கிறது. வலுவான ஒரு கட்சியுடன் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜக விரும்புகிறது. இந்த சூழலில் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு கூடுகிறது.

 

Tags :

Share via