சுடுகாட்டிற்கு பாதை இல்லை.. சடலத்துடன் சேற்றில் இறங்கிய மக்கள்

by Staff / 17-10-2024 04:27:29pm
சுடுகாட்டிற்கு பாதை இல்லை.. சடலத்துடன் சேற்றில் இறங்கிய மக்கள்

திருத்துறைப்பூண்டி எடையூரில் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. சாலை சுடுகாடு வரையில் போடப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் உயிரிழந்தவர்கள் சடலத்தை முழங்கால் அளவு சேற்றிலேயே எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via