தமிழக சட்டமன்றத்தின் 17- ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நடந்து வருகிறது.

by Admin / 11-05-2026 10:16:00am
தமிழக சட்டமன்றத்தின் 17- ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நடந்து வருகிறது.

தமிழக சட்டமன்றத்தின் 17 ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நடந்து வருகிறது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழக முதலமைச்சராக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கட்சியின் தலைவரும் முதலமைச்சர் ஆன ஜோசப் விஜய் முதலாவதாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகராக இருக்கும் சோழவந்தான் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக பதவி ஏற்றிருக்கும் என் .ஆனந்த் ,ஆதவ் அர்ஜுன்,அருண் ராஜ் ,செங்கோட்டையன்,வெங்கட்ராமன்,நிர்மல் குமார், பிரபு உள்ளிட்டோர் பதவியேற்றனர். இவர்களைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தம் எம்.எல்.ஏ பதவி ஏற்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என மூத்த தி.மு.க,அ.தி.மு.க. கட்சி ஆளுமைகள் எம்எல்ஏவாக பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழக சட்டமன்றத்தின் 17- ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நடந்து வருகிறது.
 

Tags :

Share via
Logo