,ஆயுத பூஜைதொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை ,விஜயதசமி ஆகிய நவராத்திரி பூஜை முதன்மையானது. அதன் காரணமாக, சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள இடங்களுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர். சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விடுமுறை தினத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர்விடுமுறை யை முன்னிட்டு 9 .10. 2024 மற்றும் 10 .10 .2024 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் ,மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ,சேலம் ,ஈரோடு ,திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 9. 10. 24 புதன்கிழமை அன்று 225 பேருந்துகளும் 10 .10 .24 வியாழக்கிழமை அன்று 80 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 9. 10 .24 புதன்கிழமை அன்று 35 பேருந்துகளும் 10. 10. 2024 வியாழக்கிழமை அன்று 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் பெங்களூர் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 9. 10. 2024 மற்றும் 10. 10 .2024 ஆகிய நாட்களில் 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது .மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊரிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிய திட்டமிடப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த வார புதன்கிழமை அன்று 6582 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 22,236 பயன்களும் மற்றும் ஞாயிறு அன்று 21,311 பயன்களும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டணி தவிர்க்கும்பொருட்டு தங்களது பயணத்திற்குwww.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்திட பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :