வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்

by Admin / 05-10-2024 02:03:50am
வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான பந்த கால் நடும் விழா நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்த பொழுதில் நடைபெற்றது.. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தொண்டர்களுக்கு முதல் முதலாக ஒரு கடிதம் வாயிலாக தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில், உங்களை நானும் என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன் நினைக்காத நிமிடம் கூட இல்லை ஏனெனில் நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு .அந்த உணர்வின் அடிப்படையில் தான் இந்த கடிதம். அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும் .இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும் .அதை அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றி காட்ட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கும். ஒரு லட்சியம். நம் கழகம் மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கம் அன்று. இது ஆற்றல் மிக்க பெரும் படை  சிங்கப்படை. சிங்கப்பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை. இவர்களுக்கு, அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை ,நம் மீது வீசுவது அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் போதுதான் அவர்களுக்கு புரியும், தமிழக வெற்றிக்கழகம், ஏதோ பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சிஅன்று உயிர் கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி பெறபோகிற கட்சி என்பதை நம்மை எடை போட்டஒருவரும் இனிமேல் புரிந்து கொள்வர். மாநாட்டு பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அது சார்ந்த சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கி விட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்க போகும் சந்தோஷ தருணங்களை இப்போது மனம் அளவிட தொடங்கிவிட்டது .விழுப்புரம் சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம் என்று எழுதி உள்ளார்..

வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்
 

Tags :

Share via