வேலியே பயிரை மேய்ந்த அவலம்… கோயில் உண்டியலை உடைத்து திருடிய தீட்சிதர்…

by Admin / 04-10-2021 11:46:00pm
வேலியே பயிரை மேய்ந்த அவலம்… கோயில் உண்டியலை உடைத்து திருடிய தீட்சிதர்…

குறிஞ்சிப்பாடியில் கோயில் உண்டியலை உடைத்து திருடிய தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள காமேஸ்வரர் மற்றும் கஜமுக விநாயகர் கோயில் உண்டியலை, கடந்த 28-ம் தேதி உடைத்த மர்ம நபர், அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், குறிஞ்சிப்பாடி எம்.ஜி.ஆர்.

 சிலை அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டுடிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் சிதம்பரம் அக்ரகார தெருவைச் சேர்ந்த பாலாஜி என்றும், குறிஞ்சிப்பாடி கோயில் உண்டியலை உடைத்து  திருடியது இவர்தான் எனவும் தெரியவந்தது.

மேலும், நெய்வேலி இந்திராநகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் தீட்சீராக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தீட்சிதர் பாலாஜியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 ஆயிரத்து 245 ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories