முதல்வருடன் ரகுராம் ராஜன் சந்திப்பு

by Staff / 08-09-2023 01:49:52pm
முதல்வருடன் ரகுராம் ராஜன் சந்திப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிளும் உடனிருந்தனர். இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பொருளாதார கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via