கறி சால்னா செய்வது எப்படி?

by Admin / 12-08-2021 11:18:33am
கறி சால்னா செய்வது எப்படி?

தேவை

கறி – 1/4 கிலோ

தக்காளிப்பழம் – 200 கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

நல்லெண்ணெய் – 4 கரண்டி

தேங்காய் – 1 மூடி

வற்றல் – 8

சீரகம் – 2 தேக்கரண்டி

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தக்காளிப்பழத்தையும் (வெங்காயம், வற்றல், சீரகம் சேர்த்து அரைக்கவும்) அரைத்த மசாலையும் போட்டு நன்றாக சிவக்க வதக்கி கறியைப் போட்டு தேங்காய்ப் பால் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் போட்டு மூடி நன்றாக வெந்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். தேங்காய்ப்பாலுக்குப் பதில் தேங்காய்ச்சில்லை நன்றாக அரைத்துப் போடலாம்.

 

Tags :

Share via