புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போராட்டம்-எடப்பாடி பழனிசாமி
புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும், இந்த விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கண்டித்தும் நாளை (ஜூலை 5) நண்பகல் 12 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்பு அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
Tags : எடப்பாடி பழனிசாமி