ரயில் தண்டவாளத்தில் குடை விரித்து படுத்து தூங்கிய முதியவர்

by Staff / 25-08-2024 05:16:24pm
ரயில் தண்டவாளத்தில் குடை விரித்து படுத்து தூங்கிய முதியவர்

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் குடை விரித்து படுத்து தூங்கியுள்ளார். முதியவரை கண்டதும் ரயிலை நிறுத்திய ஓட்டுநர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் முதியவரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர், நடு தண்டவாளத்தில் முதியவர் படுத்து உறங்கியதன் காரணமாக, ரயில் பாதி வழியிலே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

Tags :

Share via