இந்தியாவின் ஆணிவேர் ஆன்மீகம்தான்: ஆளுநர் ரவி

by Staff / 07-10-2022 03:04:55pm
 இந்தியாவின் ஆணிவேர்  ஆன்மீகம்தான்: ஆளுநர் ரவி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது. அது நமது பாரத நாட்டின் பெருமை கொண்ட ஒன்று. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு நூல்தான் திருக்குறள். ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆணிவேர். ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புத்தகத்தை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு சிலர் திருக்குறளை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo