கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் 17ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு

by Editor / 14-12-2022 08:02:25am
கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் 17ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு

கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நாகை, திருவாரூர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், 15, 16, 17ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகும்.

மேலும், வரும் 16ஆம் தேதி வரை மீனவர்கள் லட்சதீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோர பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் 17ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு
 

Tags :

Share via