காதலித்த பெண்ணின் வீட்டை சூறையாடிய ரவுடிக்கு காப்பு

by Staff / 04-05-2024 02:08:06pm
காதலித்த பெண்ணின் வீட்டை சூறையாடிய ரவுடிக்கு காப்பு

திருச்சி மாவட்டம் புத்தூர் கீழ வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரவுடி வெங்கி என்கிற வெங்கடேசன். இவர் புத்தூர் சீனிவாசன் நகர் 5வது மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்தார். காதல் விவகாரம் அறிந்து அந்த பெண்ணின் தாயார் வெங்கியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். வீட்டின் ஜன்னல், கதவு, மொபட் ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கியை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories