தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுதினம் 7,435 காவல்துறையினர் பாதுகாப்பு.

by Staff / 11-09-2025 10:28:21am
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுதினம் 7,435 காவல்துறையினர் பாதுகாப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுதினம் இன்று (செப் 11) கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பரமக்குடிக்கு அரசியல்கட்சி பிரமுகர்கள் வருகை தந்து செல்வார்கள். பதற்றத்தை தடுக்க காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 7,435 காவல்துறையினர் ஐஜி டேவிட் ஆசிர்வாதத்தின் கீழ் ஒருங்கிணைந்துள்ளனர். சுமார் 161 இடங்கள் தடை செய்யப்பட்ட பதற்றமான பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுதினம் 7,435 காவல்துறையினர் பாதுகாப்பு.

Share via