கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை ஆரப்பாளையம், பொன்னகரம் குறுக்கு சந்து பகுதியைச் சேர்ந்த பாண்டி மகள் கண்மணி ( 19) என்பவர் மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் பி. ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கண்மணி யாரோ ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.இதனை தந்தை பாண்டி கண்டித்து உள்ளார். எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த கண்மணி, நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :