மணப்பாறை அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற புத்தாநத்தம் ஊராட்சி செயலர் கைது .

திருச்சி மாவட்டம் .மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் முகமது இஸ்மாயில் என் பவரிடம் 6,000 லஞ்சம் பெற்ற போது திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்பி.மணிகண்டன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags : Puthanatham panchayat secretary arrested for accepting bribe from a contractor near Manapparai.