கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் குழந்தை கொலை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கள்ளக்காதலுக்காக குழந்தையை கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த ராஜேஷ் ராணா (28) மும்பையில் கூலித் தொழிலாளியாக உள்ளார். அதே மாநிலத்தை சேர்ந்த ரிங்கி (23) என்ற பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் மும்பையில் வசித்து வருகிறார். தினசரி வேலைக்கு சென்ற இடத்தில் இருவரும் பழக்கமாகி சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையே உள்ள உறவுக்கு குழந்தை தடையாக இருந்ததால் சில நாட்களுக்கு முன்பு குழந்தையைக் கொன்று கால்வாயில் வீசியுள்ளனர்.பின்னர், குழந்தை கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்து நாடகமாடியுள்ளனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, ராஜேஷ் மற்றும் ரிங்கியை போலீசார் கைது செய்தனர்.
Tags :