தேனி அருகே பூத்தது நீலக் குறிஞ்சிப் பூ: மக்கள் மகிழ்ச்சி

by Admin / 03-08-2021 05:50:38pm
தேனி அருகே பூத்தது நீலக் குறிஞ்சிப் பூ: மக்கள் மகிழ்ச்சி



கம்பம்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சிப்பூ தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டம் சாத்தாம்பாறை கிராமப் பஞ்சாயத்து மலைப்பகுதிகளில் பூத்துள்ளது. பொதுமக்கள் இதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை கிராமப் பஞ்சாயத்து பகுதியில் சோழா தேசிய பூங்கா உள்ளது. இங்கு கிழக்கத்தி மலா என்றழைக்கப்படும் மலையில் 10 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் வனப்பகுதியில் நீல குறிஞ்சிப் பூ பூத்துள்ளது.

இந்தப் பூ 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வளர்ந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இந்தப் பூ உலக அளவில் 450 வகை பூக்கள் உள்ளது. இந்தியாவில் மட்டும் 146 வகையான குறிஞ்சிப் பூக்களின் கேரள மாநிலத்தில் மட்டும் 43 வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஸ்ட்ரோபிளன்தீஸ் குந்தியானா என தாவர வகை பெயர் கொண்ட இந்த பூ உள்ளூரில் நீல குறிஞ்சி பூ என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மூணாறு ஆனைமலை தொடரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் நீல குறிஞ்சி பூ பூத்தது, இந்த பூக்களை பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

மூணாறு இரவிகுளம் தேசியப் பூங்காவின் உதவிக் காப்பாளர் ஜெ. நெரிம்பரம்பில் கூறும்போது, இரவிகுளம் தேசிய பூங்காவில் நீலக் குறிஞ்சி பூ பூத்திருப்பது பார்க்க ரம்யமாக, பிரம்மாண்டமாக உள்ளது.

அடுத்த முறை பூப்பதற்காக இதன் விதைகள் காற்றில் பறந்து தேசியப் பூங்காவின் மற்ற பகுதியிலும் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இதன் பரப்பளவு கூடும்.

குறிப்பாக நீலக் குறிஞ்சி பூ மேற்கு மலைத்தொடரில் இடுக்கி மாவட்டத்தில் ஆனைமலை பகுதியில் மட்டும் பூத்திருப்பது மிகவும் அரிய வகை ஆகும், சுற்றுலாப் பயணிகள் வர தடை உள்ளதால் பார்வையாளர்கள் இல்லை, உள்ளூர் மக்கள் ரசித்து செல்கின்றனர் என்றார்.

இதையும் படிக்க | ரசிகர்கள் உற்சாக வரவேற்பு: நாடு திரும்பினார் பி.வி. சிந்து

 

Tags :

Share via