உறவுகள் ...ஏன் ..விலகி செல்கின்றனர்.
உறவுகள் என்னும் பிணைப்பு ,மனித சமூகத்தினர் தவிர வேறு எந்த ஜீவ ராசிகளுக்கும் ஏற்படுத்தப்படவில்லை.
தாய்-குட்டி என்கிறதை தவிர இணை என்கிற பிணைப்பு கூட ஒரு சில உயிரினங்கள் தவிர..மற்றவைகளுக்குள்
வலுவாக இல்லை.
புறா தன் இணை புறா இறந்து விட்டால் கூழாங்கற்களை உண்டு இறந்து விடுமென்றும் குரங்கு தன் இணையான
கடுவன்(ஆண்குரங்கு)இறந்துபடுமின் தன் குட்டிகளை தனக்கு நெருக்கமான குரங்கு கூட்டத்தில் சேர்த்து விட்டு
மலை உச்சியிலிருந்து குதித்து மாண்டுவிடும் என்று பண்டைய தமிழ்ச்சமூக இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆனால், மனித உறவுகள் 1)ரத்த உறவு முறை 2)திருமணத்தால் ஏற்படும் உறவு என இரண்டு முறையில் பிணைக்கப்
பட்டு பேணப்படுகின்றன.ரத்த உறவு என்பது உடன் பிறந்தார்,பெற்றோர் தாய்,தந்தை வழி உறவுகளைக்குறிக்கும்.
திருமண உறவு என்பது பெண்-ஆண் கொள்வினை,கொடுப்பிணை வழியாக வருவது.
இது தான் உறவு சங்கிலியின் கண்ணிகள்.இவற்றை பேணிகாப்பது என்பது பெரும் சவால்கள் நிரம்பியது.
ரத்த உறவுக்குள் சண்டை ,பிணக்கு ஏற்படுவது என்பது சொத்து அல்லது மரியாதைபடுத்தவில்லை என்பதில்தான்
உருவாகும்.திருமண உறவுக்குள் ,திருமணம் முடிந்துவிட்டதே இனி என்ன ?என்கிற அலட்சிய போக்குமேலோங்கி
உறவுகளை உதாசீனப்படுத்தும். யார் ஒத்துப்போகிறார்களோ அவர்களோடு மட்டுமே பந்தத்தை வலுப்படுத்தி
மற்றவர்களை ஓரங்கட்டுகின்ற போக்கு தொடர்கிறது.இதனாலும் உறவுச்சங்கிலியில் கண்ணியின் பிணைப்பு
நெகிழ்ந்து போகும் தன்மை உருவாகும்.மற்றவர்களை மதிப்பது,விட்டுக்கொடுத்து செல்லுதல்தான் உறவுகளை
இறுக்கமாக வைத்திருக்கும்.
Tags :