விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்ட சகாயம்

கிரானைட் முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரை மாவட்ட கனிம வள நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 2014ல் தமிழ்நாட்டில் நடந்த கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, 2023ல் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு விளக்கிக்கொள்ளப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். தன்னுடைய கடிதத்திற்கு இதுவரை பதில் வராததால், நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு தற்போது கடிதம் எழுதியுள்ளார்.
Tags :