'அண்ணாமலை பாஜகவுக்கு எழுச்சியை தந்துள்ளார்” - வானதி சீனிவாசன்

by Staff / 16-06-2024 02:04:06pm
'அண்ணாமலை பாஜகவுக்கு எழுச்சியை தந்துள்ளார்” - வானதி சீனிவாசன்

டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 16) கோவை வந்த பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய எழுச்சியை அண்ணாமலை தந்துள்ளார். கோவை நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாக வாக்குகளை மக்கள் பாஜகவுக்கு தந்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம்“ என்றார். மேலும், “பாஜகவுக்கு எதிரான மனநிலையை தமிழக முதல்வர் மாற்றிக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via