முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து

by Staff / 27-09-2023 01:03:09pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து

மிலாது நபி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு மிலாது நபி நன்னாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக உரிமைப் பாதுகாவலனாக விளங்கும் திமுக அரசுதான், அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்களுக்கு மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நல்கி, தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களின் நலன் காத்து நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via