10 நாள்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - அன்புமணி

வன்னியர்களுக்கு 10 நாள்களில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சியில் தமிழக அரசு ஒரு அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் என்ன செய்கிறது? அடுத்த 10 நாள்களுக்குள் ஆணையத்திடம் இருந்து பரிந்துரையை பெற்று, இட ஒதுக்கீட்டு சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Tags :